பர்சனல் பைனான்ஸ்
வகுப்புகள்
பங்குகள்
தங்கம் விலை
Bank Holidays in India
கரன்சி
இன்சூரன்ஸ்
BSE
26,524.55
121.59
NSE
8,127.85
33.15
குட்ரிட்டன்ஸ்
»
தமிழ்
»
வகுப்புகள்
சொத்தின் மீதான கடனில் உள்ள நன்மைகள் என்னென்]
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க
ஷேர் செய்ய
ட்வீட் செய்ய
ஷேர் செய்ய
கருத்துக்கள்
மெயில்
சொத்தின் மீதான கடனில் உள்ள நன்மைகள் என்னென்ன?
சென்னை: வங்கிகளிடம் இருந்து நாம் மிக எளிதாகப் பெறக் கூடிய கடன் ஒன்று
இருக்கிறது என்றால் அது நமது சொத்தின் மீது பெறக்கூடிய கடனாகும். இந்த
சொத்துக் கடனில் வட்டி விகிதம் குறைவாக இருக்கும். மிக விரைவாக
கிடைத்துவிடும். மேலும் இந்த கடனைப் பெறுவதற்கு நிறைய செலவு ஆகாது. எனவே
சொத்தின் மீது நாம் வாங்கும் கடனில் ஏராளமான நன்மைகள் உள்ளன.
சொத்தின் மீது எப்போது கடன் வாங்கலாம்?
பலர் பல காரணங்களுக்காக தங்கள் சொத்தின் மீது கடன் வாங்குகின்றனர்.
குறிப்பாக தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த அல்லது தங்களுடைய மகன் அல்லது
மகளுக்கு திருமணம் செய்து வைக்க அல்லது வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள என பல
காரணங்களுக்காக சொத்தின் மீது கடன் வாங்குகின்றனர். இந்தியாவில் தங்கத்தின்
மீது மக்களுக்கு ஒரு உணர்வுபூர்வமான நெருக்கம் உள்ளதால் அவர்கள் தங்கத்தை
எளிதாக விற்பதில்லை. அதனால் பெரும்பாலும் சொத்தின் மீது கடன் வாங்குவதையே
விரும்புகின்றனர். மேலும் மற்ற கடன்களைவிட சொத்தின் மீது கடன் பெறுவது
மிகவும் எளிது.
எவ்வளவு கடன் கிடைக்கும்?
சொத்தின் மதிப்பை அளவிடுவது வங்கிகளுக்கு வங்கிகள் மாறுபடுகிறது. ஆனால்
நமது சொத்தின் மதிப்பில் இருந்து 50 முதல் 60 சதவீதம் வரையிலான கடன்
கண்டிப்பாக கிடைக்கும். எடுத்துக்காட்டாக ஒருவரிடம் ரூ. 1 கோடி மதிப்பிலான
சொத்து இருக்கிறது என்றால் அவருக்கு ரூ.50 முதல் 60 லட்சம் வரை கடன்
கிடைக்கும். கடனை வாங்கிய பின்பு சொத்தின் மதிப்பு அதிகரித்தால், கடன்
தொகையும் அதிகரிக்கும்.
வீட்டுக் கடனை பெறுவதற்கு ஆகும் செலவை போல் சொத்தின் மீதான கடனை
பெறுவதற்கும் செலவு ஆகும். எனவே எவ்வளவு கடனை வாங்கப் போகிறோம் என்று
முதலிலேயே முடிவு செய்திருக்க வேண்டும்.
சொத்தின் மீதான கடனில் என்னென்ன நன்மைகள்?
மற்ற கடன்களைவிட சொத்தின் மீது கடன் வாங்குவது மிக எளிது. அதுபோல் மற்ற
கடன்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தைவிட சொத்தின் மீதான கடனுக்கு
வழங்கப்படும் வட்டி விகிதம் குறைவாக இருக்கும். மேலும் சொத்தின் மீது கடன்
வாங்கினாலும் அந்த சொத்து உரிமையாளர் பெயரிலேயே இருக்கும். வங்கியிடம்
கைமாறாது.
இந்தியாவில் சொத்தின் மீதான கடன் மிகவும் பிரபலமாகவில்லையானாலும், இந்த
கடனில் ஏராளமான நன்மைகள் உண்டு என்பது மட்டும் உண்மை.
No comments:
Post a Comment